காஷ்மீரில் 10 ஆயிரம் அடி உயரத்தில் தீபாவளி கொண்டாடிய ராணுவ வீரர்கள்
எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள், இனிப்புகளை வழங்கி தீபாவளியை கொண்டாடினர்.
ஸ்ரீநகர்,
தீபாவளி பண்டிகை இன்றைய தினம் கொண்டாடப்படும் நிலையில், வெளியூர்கள் மற்றும் வெளி மாநிலங்களில் பணியாற்றி வருபவர்கள் தங்கள் குடும்பத்துடன் சேர்ந்து பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்குப் படையெடுத்துள்ளனர். இதனிடையே எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள், இனிப்புகளை வழங்கி தீபாவளியை கொண்டாடினர்.
காஷ்மீரில் உள்ள பூஞ்ச் பகுதியில் சுமார் 10 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள பனிப்பிரதேசத்தில் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தீபாவளியை முன்னிட்டு அவர்கள் ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். மேலும் மெழுகுவர்த்திகளை ஏற்றி தீபாவளி கொண்டாடிய அவர்கள், நாட்டு மக்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.