கர்நாடகாவில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000...!

கர்நாடகாவில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 வழங்கும் கிரக லட்சுமி திட்டத்தைத் தொடங்கி வைத்தார் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா தொடங்கி வைத்தார்.

Update: 2023-07-19 15:10 GMT

Image Courtesy : @CMofKarnataka twitter

பெங்களூரு,

கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய அளவிலான வெற்றியைப் பெற்றது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி அளித்த தேர்தல் வாக்குறுதியில் மிக முக்கியமானதாகக் கருதப்பட்டது மாதந்தோறும் குடும்பத் தலைவிக்கு ரூ.2000 வழங்கும் திட்டம் ஆகும்.

காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தவுடன் கர்நாடக அமைச்சரவை இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. இதனைத் தொடர்ந்து, இன்று கர்நாடகாவில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 வழங்கும் கிரக லட்சுமி திட்டத்தைக் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா தொடங்கி வைத்தார்.

கர்நாடக அரசின் அறிவிப்பின்படி, இந்த திட்டம் மாநிலத்தில் கிட்டத்தட்ட 12.8 மில்லியன் குடும்பங்கள் பயனடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியுள்ள பெண்கள் சேவா சிந்து உத்தரவாதத் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்யலாம் அல்லது, தங்கள் பகுதியில் இந்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட மையத்திற்கு நேரில் சென்று எந்தவொரு கட்டணமும் செலுத்தாமல் பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பயனாளிகளின் பெயர்களைப் பதிவு செய்வதற்கு வீடு வீடாகச் சென்று பதிவு செய்யும் பணியை மாநில அதிகாரிகள் விரைவில் தொடங்குவார்கள். 8147500500 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ். அனுப்புவதன் மூலமோ அல்லது 1902 என்ற எண்ணிற்கு அழைப்பதன் மூலமோ இந்தத் திட்டத்தைப் பற்றிய விளக்கத்தை அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Full View

 

Tags:    

மேலும் செய்திகள்