வன்முறையில் ஈடுபட்டோரின் புகைப்படங்களுடன் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் - போலீசிடம் விளக்கம் கேட்ட ஜார்கண்ட் அரசு

ஜார்கண்ட் மாநிலத்தில் கலவரத்தில் ஈடுபட்டவர்களின் புகைப்படங்களுடன் கூடிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது குறித்து போலீசிடம் அம்மாநில அரசு விளக்கம் கோரியுள்ளது.

Update: 2022-06-16 10:02 GMT

ராஞ்சி,

ஜார்கண்ட் மாநிலத்தில் கலவரத்தில் ஈடுபட்டவர்களின் புகைப்படங்களுடன் கூடிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது குறித்து போலீசிடம் அம்மாநில அரசு விளக்கம் கோரியுள்ளது.

நபிகள் நாயகம் குறித்து பாஜக செய்தித்தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா பேசிய கருத்து பெரும் சர்ச்சையானது. இதற்கு சர்வதேச அளவில் கண்டனம் வலுத்த நிலையில், அவர் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

நுபுர் சர்மாவை கைது செய்யவேண்டுமென கூறி நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் பல்வேறு பகுதிகளில் வன்முறையில் முடிந்தது.

நுபுர் சர்மாவை கைது செய்ய கோரி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஏராளமான இஸ்லாமியர்கள் கடந்த வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டம் கலவரமாக மாற போராட்டகாரர்களை கலைக்க போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இருவர் உயிரிழந்தனர்.

இது அம்மாநிலத்தில் பெரும்புயலை கிளப்ப குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய போலீசுக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டது.

இந்த நிலையில் கலவரத்தில் ஈடுபட்டவர்களின் புகைப்படத்துடன் கூடிய சுவரொட்டிகள் காவல்துறையால் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன. பின் சுவரொட்டியில் திருத்தம் உள்ளதாக கூறி போலீசார் அவற்றை நீக்கினர்.

இதனையடுத்து, இது குறித்து விளக்கமளிக்க காவல்துறைக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்