ராஜஸ்தானில் முதல்முறையாக பெண்கள், பட்டியலின மக்கள் அர்ச்சகர்களாக நியமனம்!

ராஜஸ்தானில் முதல்முறையாக பெண்கள், பட்டியல் மற்றும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர்கள் அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2023-07-03 03:41 GMT

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானில் 'தேவஸ்தான்' எனும் பெயரில் அறநிலையத்துறை அமைச்சகம் செயல்படுகிறது. இதன் கீழ் மாநிலம் முழுவதிலும் பல பழமையான கோயில்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.

இவற்றில் நிர்வாகங்களை கவனிக்கும் அறநிலையத்துறை அதற்கான அர்ச்சகர்களையும் நியமிக்கும் பொறுப்பையும் ஏற்றுள்ளது. இப்பணிக்கு கடைசியாக 2014-ல் விளம்பரம் அளிக்கப்பட்டு சுமார் 9 வருடங்களுக்கு பின் 65 அர்ச்சகர்கள் நியமிக்கப் பட்டனர். அதன் பிறகு தற்போதைய காங்கிரஸ் அரசால் 17 அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டது. அந்த 17 பேரில் 8 பெண்கள், தலித், பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டது.

ராஜஸ்தானில் முதல் முறையாக பெண்கள், பட்டியல் மற்றும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர்கள் அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கு ராஜஸ்தானின் ஒரு பிரிவினர் இடையே புதிய நியமனத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

2014-ம் ஆண்டு நடத்தபட்ட தேர்வு முடிவு வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது காங்கிரஸ் அரசின் நடவடிக்கையால் மொத்தம் 65 பேர் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்