கேரளாவில் 15-வது நாள் நடைபயணத்தை தொடங்கினார் ராகுல்காந்தி...!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 15-வது நாளாக எர்ணாகுளத்தில் தனது நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார்.

Update: 2022-09-22 03:25 GMT


ஏர்ணாகுளம்,

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ''பாரத் ஜோடோ யாத்ரா'' என்ற இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரியில் காந்தி மண்டபம் முன்பு இருந்து தொடங்கினார். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ராகுல்காந்தியிடம் வழங்கி பாதயாத்திரையை தொடங்கி வைத்தார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் இணைந்து மேற்கொண்டுள்ள 'பாரத் ஜோடோ யாத்திரை' தமிழகத்தில் தொடங்கி இப்போது கேரளா வழியாக பயணிக்கிறது.

இந்தநிலையில் இன்று 15-வது நாளாக கேரள மாநிலம் எர்ணாகுளம், தேசோம் பகுதியிலிருந்து கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் காலை நடைபயணத்தை தொடங்கியுள்ளார். இந்த நடைபயணத்தின் போது கேரள மக்கள் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு அளித்து வருகின்றனர். எர்ணாகுளம், தேசோம் பகுதியில் பயணத்தை தொடங்கிய ராகுல்காந்தி சாலக்குடியில் நிறைவு செய்கிறார்.

இதனிடையே கட்சியின் முக்கிய ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ராகுல்காந்தி பாதயாத்திரையை ஒருநாள் நிறுத்திவிட்டு நாளை (வெள்ளிக்கிழமை) டெல்லிக்கு செல்கிறார் என்பது குறிப்பிட்டத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்