மருத்துவமனைக்குள் புகுந்து டாக்டரை 18 முறை அரிவாளால் வெட்டிய நபர் - அதிர்ச்சி சம்பவம்

மருத்துவமனைக்குள் புகுந்து டாக்டரை 18 முறை அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-02-25 23:03 GMT

மும்பை,

மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டம் பஞ்ச்வதி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றிவரும் டாகர் கைலாஷ் ரதி (வயது 48). இவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மருத்துவமனையில் பணியில் இருந்தபோது செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது, மருத்துவமனைக்குள் அத்துமீறி நுழைந்த நபர் மறைந்திருந்து கைலாஷ் ரதியை கடுமையாக தாக்கினார். மேலும், தான் மறைத்துவைத்திருந்த அரிவாளால் டாக்டர் கைலாஷ் ரதியை சரமாரியாக வெட்டினார். அரிவாளால் 18 முறை வெட்டப்பட்ட டாக்டர் கைலாஷ் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். கைலாஷ் ரதியின் அலறல் சட்டம் கேட்ட அங்கிருந்தவர்கள் விரைந்து வருவதற்குள் தாக்குதல் நடத்தியவர் அங்கிருந்து தப்பியோடினார். தாக்குதலில் படுகாயமடைந்த கைலாஷ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் தாக்குதல் நடத்திய நபர் அந்த மருத்துவமனையில் பணியாற்றிய முன்னாள் ஊழியரின் கணவர் என்பது தெரியவந்தது. பெண் முன்னாள் ஊழியர் 12 லட்ச ரூபாய்க்கு மேல் முறைகேடு செய்ததால் சமீபத்தில் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மனைவியை வேலையை விட்டு நீக்கியதால் ஆத்திரமடைந்த கணவர் மருத்துவமனைக்குள் நுழைந்து டாக்டரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்