காஷ்மீர் : பயங்கரவாதிகள் தாக்குதலில் 3 புலம்பெயர் தொழிலாளர்கள் காயம்

தெற்கு காஷ்மீரில் உள்ள ஷோபியான் பகுதியில் துப்பாக்கிச்சூடு நடந்ததாக கூறப்படுகிறது.

Update: 2023-07-13 17:18 GMT

ஜம்மு காஷ்மீர்,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் மூன்று புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் காயமடைந்தனர். உள்ளூர் அல்லாதவர்கள் மீதான தாக்குதலில் சமீபத்தியது.

தெற்கு காஷ்மீரில் உள்ள ஷோபியான் பகுதியில் துப்பாக்கிச்சூடு நடந்ததாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் அன்வால் தோக்கர், ஹீரலால் மற்றும் பாண்டூ என அடையாளம் காணப்பட்டுள்ளனர்

அவர்கள் சோபியான் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், அவர்கள் ஸ்ரீநகருக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு பயங்கரவாதிகள் குறித்து பாதுகாப்புப்படையினர் தேடுதல் வேட்டை நடத்திவருகின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்