ஒடிசாவில் தம்பதியை கடத்திச் சென்று படுகொலை செய்த மாவோயிஸ்டுகள்

நேற்று மாவோயிஸ்டுகளால் கடத்திச் செல்லப்பட்ட தம்பதியின் உடல்கள் இன்று காட்டுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டன.

Update: 2024-03-09 12:19 GMT

புவனேஸ்வர்,

ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டத்தில் உள்ள பிடபடார் என்ற கிராமத்தைச் சேர்ந்த தாஹிரா கன்ஹர் மற்றும் அவரது மனைவி படாசி கன்ஹர் ஆகியோரை நேற்று காலை மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிலர் அவர்களது வீடு புகுந்து கடத்திச் சென்றனர். அவர்கள் இருவரையும் அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு மாவோயிஸ்டுகள் கொண்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில், இன்று காலை தாஹிரா கன்ஹர் மற்றும் படாசி கன்ஹர் ஆகிய இருவரின் உடல்களும் காட்டுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டன. இந்த தம்பதியினர் மாவோயிஸ்டுகளின் இருப்பிடம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததாக எழுந்த சந்தேகத்தின் பேரில் இந்த படுகொலை நடந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தின் பின்னணியில் கலஹண்டி-கந்தமால்-பவுத்-நாயகர் (கே.கே.பி.என்.) பிரிவைச் சேர்ந்த மாவோயிஸ்டுகள் இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்