உத்தரப்பிரதேசம்: மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தில் கொலை செய்த கணவன்..!

உத்தரப்பிரதேசத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

Update: 2022-07-22 22:01 GMT

காசியாபாத்,

உத்தரப்பிரதேசத்தில் நபர் ஒருவர் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கத்தியால் குத்தி கொன்று விட்டு தற்கொலை செய்து கொள்வதற்காக 2-வது மாடியில் இருந்து குதித்துள்ளார்.

காசியாபாத்தைச் சேர்ந்த நபர் விகாஸ் மீனா. வேலையில்லாத இவர், வங்கி மேலாளரான தனது மனைவி காம்யாவின் நடத்தை மீது சந்தேகப்பட்டுள்ளார். இதையடுத்து நேற்று காம்யாவை கத்தியால் குத்திவிட்டு தற்கொலை செய்து கொள்வதற்காக விகாஸ் 2-வது மாடியில் இருந்து குதித்துள்ளார்.

விகாசின் தந்தை போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயமடைந்த காம்யாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு மருத்துவர்கள் காம்யா இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

விகாஸ் மீனா, தலை மற்றும் கால்களில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காம்யாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்