பைக் சாவிக்காக நடந்த சண்டையில் மகனின் கையை துண்டித்த தந்தை - மகன் உயிரிழப்பு

பைக் சாவிக்காக நடந்த சண்டையில் தந்தை, கையை துண்டித்ததால் அதிக இரத்தம் வெளியேறி மகன் உயிரிழந்தார்.

Update: 2022-08-05 12:35 GMT

தாமோ,

மத்தியப் பிரதேசம் மாநிலம் தாமோவில் மோட்டார் சைக்கிள் சாவிக்காக நடந்த சண்டையில் தந்தை கோடரியால் கையை துண்டித்ததால் அதிக அளவில் ரத்தம் வெளியேறி 21 வயது மகன் உயிரிழந்தார்.

மோதி படேல் (வயது 51) அவரது மூத்த மகன் ராம் கிசான் (வயது 24) இருவரும் வெளியில் செல்வதற்காக அவரது இளைய மகன் சந்தோஷ் படேலிடம் மோட்டார் சைக்கிள் சாவியைக் கேட்டுள்ளனர். சந்தோஷ் சாவியை கொடுக்க மறுத்துள்ளார். இதுகுறித்து அவர்களிடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

ஆத்திரமடைந்த மோதி, ராம் கிசான் இருவரும் சந்தோஷை தாக்கியுள்ளனர். மோதி சந்தோஷின் இடது கையை கோடரியால் துண்டித்துள்ளார். பின்னர் அவர் கோடரி மற்றும் துண்டிக்கப்பட்ட கையுடன் காவல் நிலையத்திற்கு சென்று நடந்ததை கூறியுள்ளார்.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சந்தோஷை அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.இ அங்கு அவரை மேற்சிகிச்சைக்காக ஜபால்பூருக்கு கொண்டு செல்லும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

அவ்வாறு ஜபால்பூருக்கு கொண்டு செல்லும் வழியில் அதிக அளவில் ரத்தம் வெளியேறி சந்தோஷ் பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் மோதி, ராம் கிசான் இருவரையும் கைது செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்