எதிர்க்கட்சிகள் அமளி...! மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு!
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மணிப்பூர் விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று 9வது நாளாக எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.
மணிப்பூர் வீடியோ விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடி விளக்கம் அளிக்க கோரி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதனால் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது.