கவர்னரின் அதிகாரத்தைக் குறைக்கும் மசோதா: கேரளாவில் சட்டசபையில் நிறைவேற்றம்

கேரள சட்டப்பேரவையில் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

Update: 2022-09-01 12:21 GMT

திருவனந்தபுரம்,

கேரள சட்டப்பேரவையில் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. துணை வேந்தர்கள் நியமன நடைமுறையில் கவர்னரின் அதிகாரங்களை குறைக்கும்  வகையில் மசோதாவில் முன்மொழியப்பட்டு இருந்தது.

பல்கலைக்கழகங்களின் வேந்தராக கவர்னரின் அதிகாரத்தைக் குறைக்கும் இந்த மசோதாவை எதிர்த்து எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூட்டணி அவையில் இருந்து வெளிநடப்பு செய்தது. ஆளுங்கட்சியின் பொம்மைகளை துணை வேந்தர்களாக்க இந்த மசோதா வழிசெய்யும் என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்