பெண் கன்னத்தில் 'பளார்' என அறை விட்ட பாஜக மந்திரி - அதிர்ச்சி சம்பவம்!

கர்நாடக வீட்டு வசதித்துறை மந்திரி வி.சோமனா, புகாரளிக்க வந்த ஒரு பெண்ணை ஓங்கி அறைந்த சம்பவம் நடந்துள்ளது.

Update: 2022-10-23 16:00 GMT

பெங்களூரு,

கர்நாடக வீட்டு வசதித்துறை மந்திரி வி.சோமனா, சாமராஜநகர் மாவட்டம் குண்ட்லுப்பேட்டை தாலுக்கா ஹங்கலா கிராமத்தில் ஒரு பெண்ணை ஓங்கி அறைந்த சம்பவம் நடந்துள்ளது. அவரை கண்டு, பெண் ஒருவர் தனது பிரச்சினையை கூற வந்த போது இந்த சம்பவம் நடந்தது.

சனிக்கிழமை (அக்டோபர் 22) குண்ட்லுப்பேட்டை தாலுக்கா ஹங்கலா கிராமத்தில் 175 கிராம மக்களுக்கு நில உரிமை வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மாலை 3.30 மணிக்கு திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி 6.30 மணி ஆகியும் அமைச்சர் வராததால் தொடங்கவில்லை.நிகழ்ச்சிக்கு சோமண்ணா ஒன்றரை மணி நேரம் தாமதமாக வந்ததால், அமைச்சருக்கு எதிராக அவமதிப்பு கோஷம் எழுப்பிய விவசாயிகள் சங்க தலைவர்கள் கூட்டத்தை புறக்கணித்தனர்.

இந்த நேரத்தில், மந்திரி வி.சோமனா வந்தபோது, ​​ஒரு பெண் பிரச்னை குறித்து புகார் அளிக்க வந்தார். இதற்கிடையில் அந்த பெண் அவரிடம் சென்றதும் சோமனா பொறுமை இழந்தார். பத்திரம் கிடைக்காமல் சோர்ந்து போன அந்தப் பெண், அமைச்சரை உயர்த்திய குரலில் கேள்வி எழுப்பினார். இதனால் ஆத்திரமடைந்த சோமண்ணா அந்த பெண்ணின் நெற்றியில் அறைந்தார். நெற்றியில் அடிபட்டாலும் அந்த பெண் அமைச்சரின் காலில் விழுந்து வணங்கினார்.இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இச்சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இந்நிலையில், புகாரளிக்க வந்த பெண்ணை அறைந்த வீடியோ வைரலானதையடுத்து, மந்திரி வி.சோமனா மன்னிப்பு கேட்டார்.

அவர் கூறியதாவது, "பெண்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. நானும் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்து வந்தவன். அந்த பெண்ணிடம் கையை நீட்டி வரிசையில் நிற்குமாறு கூறினேன். வேறு எந்த நோக்கமும் இல்லை.இன்று அந்த பெண்ணிற்கு நில உரிமை ஆவணத்தை வழங்கினேன்" என்று கூறினார்.

"என்னை மந்திரி அவரது கையால் அறைய வில்லை" என்று அந்த பெண் பேசும் வீடியோ இப்போது வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்