கோரமண்டல் ரெயிலில் சென்னை வர 800க்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாக தகவல்

கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் விரைவு ரெயில் இரவு 7 மணி அளவில் மற்றொரு ரெயில் மீது மோதி விபத்திற்குள்ளானது.

Update: 2023-06-02 16:57 GMT

சென்னை,

கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் விரைவு ரெயில் இரவு 7 மணி அளவில் மற்றொரு ரெயில் மீது மோதி விபத்திற்குள்ளானது. பாலசோர் மாவட்டம் பாஹாநாகா பஹார் ரெயில் நிலையம் அருகே விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசிய பேரிடர் மீட்புப்படையினர் சுமார் 120 க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்ப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இரவு நேரம் என்பதால் மீட்பு பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோரமண்டல அதிவிரைவு ரெயிலில் 10-க்கும் மேற்பட்ட பெட்டிகள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரெயில் விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒடிசாவில் கோரமண்டல அதிவிரைவு ரெயில் விபத்தில் காயமடைந்த 132 பேர் இதுவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோரமண்டல் ரெயிலில் சென்னை வர 800க்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். மீட்கப்பட்டோரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 60க்கும் அதிகமான ஆம்புலன்ஸ் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

நிலமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என ஒடிசா முதல்-மந்திரி நவீன்பட்நாயக் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்