சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசிய கொடியை வீட்டில் ஏற்றுவதற்கு மக்கள் ஆர்வம்

பொதுமக்கள் ஆர்வமுடன் தேசிய கொடியை வாங்கி சென்று தங்கள் வீடுகளில் ஏற்றுகின்றனர்.

Update: 2022-08-13 08:48 GMT

கோப்புப்படம் 

புதுடெல்லி,

நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின விழா மிக கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதை சிறப்பிக்கும் வகையில் இல்லங்கள் தோறும் இன்று (13-ந்தேதி ) முதல் 15-ந்தேதி வரை தேசிய கொடி ஏற்றுங்கள் என கடந்த 22-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

சமூக வலைதளங்கள் மூலமும் இதற்காக அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதையடுத்து தபால் நிலையங்கள் மூலமும் தேசிய கொடிகள் விற்பனை செய்யப்பட்டது. பொதுமக்கள் ஆர்வத்துடன் இந்த கொடிகளை வாங்கினார்கள். இதனால் தேசிய கொடி விற்பனை மும்முரமாக நடந்தது. இன்றும் ஏராளமான பொதுமக்கள் கொடிகளை வாங்கி சென்று தங்கள் வீடுகளில் ஏற்றினார்கள் .

பொதுமக்கள் தேசிய கொடியை வாங்க ஆர்வம் காட்டியதால், இதுவரை மொத்தம் இந்தியா முழுவதும் 20 கோடி தேசிய கொடிகள் விற்பனை ஆகி உள்ளதாக கலாச்சார துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்