விடுமுறை நாட்களில் பணியாளர்களை தொந்தரவு செய்தால் ரூ1 லட்சம் அபராதமாக விதிக்கும் பலே நிறுவனம்!

விடுமுறை நாட்களில் உடன் பணிபுரியும் சகபணியாளர்களை வேலை நிமித்தமாக தொந்தரவு செய்தால் ரூ 1 லட்சம் அபராதமாக விதிக்கப்படும் என ட்ரீம் நிறுவனம் அறிவித்துள்ளது.

Update: 2022-12-30 11:03 GMT

மும்பை,

ஐடி ஊழியர்கள் பெரும்பாலும் வருடத்தின் எல்லா நாட்களிலும் வேலை செய்வார்கள். அவர்களுக்கு இருக்கும் அதிகப்படியான வேலை அழுத்தம் காரணமாக அவர்களால் விடுமுறை நாட்களில் கூட நிம்மதியாக ஓய்வு எடுக்கமுடியாத சூழல் இருக்கும்.

குறிப்பாக அவர்களின் உயர் அதிகாரிகள் காலம் நேரம் பார்க்காமல் எந்த நேரத்திலும் தொலைபேசியில் அழைத்து வேலை செய்ய கூறுவார்கள். ஒரு சிலர் குடும்ப சூழ்நிலையை நினைத்து இவர்களும் வாங்கும் சம்பளம் நிலைக்கவேண்டும் என்பதற்காக அனைத்தையும் சகித்துக்கொண்டு பணியாற்றுவார்கள்.

பலர் இதன் காரணமாக குடும்பத்துடன் நேரம் செலவழிக்கமுடியாமல் அதிகப்படியான மன அழுத்தத்தில் வேலை செய்வதாக பல ஐடி ஊழியர்கள் நண்பர்களிடம் கூறி புலம்பி தள்ளுவார்கள்.

இந்தநிலையில் இதற்கு புதிய தீர்வு ஒன்றை இந்தியாவை சேர்ந்த ஐடி நிறுவனமான ட்ரீம் 11 நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இதில் அந்த நிறுவனத்தில் விடுமுறையில் உள்ள ஊழியர்களை தொந்தரவு செய்தால் அவர்களுக்கு ரூ.1 லட்சம் ரூபாய் அபராதம் என்று அறிவித்துள்ளது.

இந்த புதிய திட்டத்தால் இனி விடுமுறை எடுத்துக்கொள்ளும் ஊழியர்கள் அவர்களின் அலுவலக மொபைல் எண், இமெயில், மெசேஜ் அனா அனைத்தையும் நிறுத்திக்கொள்வார்கள். இவர்களை அதையும் மீறி தொந்தரவு செய்யும் உயர் அதிகாரிகளுக்கு ரூ. 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய திட்டம் எதற்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றால் முதலில் ஊழியர்களை மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கவும், இரண்டாவதாக நிறுவனம் எந்த ஒரு தனிப்பட்ட ஊழியரையும் சார்ந்திருக்கவில்லை என்பதை உணர்த்துவதே ஆகும்.

இதனால் ஊழியர்கள் பலர் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். அவர்களின் குடும்பத்துடன் இனி நேரம் செலவழிக்கலாம் என்றும் இதனால் அவர்களால் நிம்மதியாக இனி ஓய்வு எடுக்கமுடியும் என்றும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.

இதே போல பல ஐடி நிறுவங்கள் இது போன்ற முயற்சியை மேற்கொள்ளலாம் என மற்ற ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களது கருத்துகளை கூறுகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்