தனிநபர் தரவுகள் விதிமீறலுக்கு அரசும் பொறுப்பேற்க வேண்டும் - புதிய மசோதாவில் தகவல்

புதிய மசோதாவின்படி தனிநபர் தரவுகள் விதிமீறலுக்கு அரசும் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-11-20 00:28 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

தனிநபர் தரவுகளை பாதுகாக்க மத்திய அரசு மின்னணு தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா 2022-ஐ உருவாக்கி உள்ளது. தரவுகளைப் பணமாக்கும் நிறுவனங்களை பொறுப்புக் கூற வைக்கும் நோக்கில் இந்த மசோதா உருவாக்கப்பட்டு உள்ளது.

அந்தவகையில் தனிநபர் தரவுகளை சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தனால் ரூ.500 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என்பது மசோதாவின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். தரவு விதிமீறல் ஏற்பட்டால், அரசுக்கும் விதிவிலக்கு வழங்கப்படாது என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

தரவுகளை கையாளும் நிறுவனங்கள் தனிநபர்களின் அல்லது தரவு அதிபர்களின் வெளிப்படையான ஒப்புதலுடன் தரவைச் சேகரிப்பதை உறுதி செய்வதற்கும், சேகரிக்கப்பட்ட நோக்கத்திற்காக மட்டுமே அதைப் பயன்படுத்துவதற்கும் மசோதா வழிவகுப்பதாகவும் அரசு வட்டாரங்கள் மேலும் கூறியுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்