மத்திய உள்துறை செயலாளராக கோவிந்த் மோகன் நியமனம்

மத்திய அமைச்சரவையின் நியமன குழு ஒப்புதலின் பேரில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது;

Update:2024-08-15 07:48 IST

புதுடெல்லி,

மத்திய அரசின் உள்துறை செயலாளராக அஜய்குமார் பல்லா இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம் வரும் 22-ம் தேதியுடன் நிறைவடைகிறது.இந்நிலையில், புதிய உள்துறை செயலாளராக கோவிந்த் மோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மத்திய அமைச்சரவையின் நியமன குழு ஒப்புதலின் பேரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது கோவிந்த் மோகன் கலாச்சாரத்துறை செயலாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Tags:    

மேலும் செய்திகள்