ஜி20 உச்சி மாநாடு: பைடனுடனான சந்திப்பு பயனுள்ளதாக இருந்தது- பிரதமர் மோடி

Update:2023-09-08 10:39 IST
Live Updates - Page 2
2023-09-08 12:26 GMT

ஜி20 உச்சிமாநாட்டை நடத்துவதில் இந்தியா மகிழ்ச்சியடைகிறது - பிரதமர் மோடி

பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் வரும் 9,10ம் தேதிகளில் ஜி20 உச்சிமாநாட்டை நடத்துவதில் இந்தியா மகிழ்ச்சியடைகிறது. ஜி20 மாநாட்டை முதல் முறையாக இந்தியா தலைமை தாங்கி நடத்துகிறது. அடுத்த 2 நாட்களுக்கு உலக நாடுகளின் தலைவர்களுடன் மிகவும் ஆரோக்கியமான உரையாடல் இருக்கும் என நான் நம்புகிறேன்.

டெல்லியில் நடைபெறும் ஜி20 உச்சிமாநாடு மனிதத்தை மையப்படுத்தியதாகவும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாகவும் அமையும் என நான் நம்புகிறேன்.

நமது கலாச்சார பண்பாட்டில் வேரூன்றி ‘வசுதேவ குடும்பம்’ என்ற கருப்பொருளை கொண்டு இந்தியா ஜி20 அமைப்பிற்கு தலைமை தாங்கியுள்ளது. ஒரே நாடு, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்பது முழு உலகமும் ஒரே குடும்பம் என்ற நமது உலக கண்ணோட்டத்துடன் ஆழமாக எதிரொலிக்கிறது. நட்பு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்த நான் சில நாட்டு தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளேன். இந்தியாவின் விருந்தோம்பலால் நம் விருந்தினர்கள் மகிழ்ச்சியடைவார்கள் என நம்புகிறேன்’ என தெரிவித்துள்ளார். 

2023-09-08 12:06 GMT

வெல்கம் ரிஷி சுனக்.. மோடி ட்வீட்

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் டெல்லி வந்ததும் தனது புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டார். அதில், ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லி வந்து சேர்ந்துவிட்டதாகவும், நம் ஒவ்வொருவரையும் பாதிக்கும் சவால்களை எதிர்கொள்வது குறித்து உலக தலைவர்களை சந்தித்து பேச உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

ரிஷி சுனக்கை வரவேற்று டுவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, சிறந்த உலகை உருவாக்குவதற்காக இணைந்து பணியாற்றக்கூடிய பயனுள்ள உச்சி மாநாட்டை எதிர்நோக்கியிருப்பதாக கூறியுள்ளார்.

2023-09-08 11:09 GMT

ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி டெல்லி வந்தடைந்தார்...!

ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி சர்ஜி லவ்ரோ டெல்லி வந்தடைந்தார். ரஷிய அதிபர் புதின் ஜி20 மாநாட்டில் பங்கேற்காத நிலையில் ரஷியா சார்பில் அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி லவ்ரோ மாநாட்டில் பங்கேற்கிறார். டெல்லி விமான நிலையம் வந்த லவ்ரோவை இந்திய அதிகாரிகள் வரவேற்றனர்

2023-09-08 09:08 GMT

அடுத்து பிரேசில் வசம் தலைமை பொறுப்பை ஒப்படைக்கும் இந்தியா

ஜி20 தலைமை என்பது ஒரு வருடத்திற்கு ஜி20 தொடர்பான நிகழ்வுகளை தலைமை தாங்கி வழிநடத்துவதுடன், உச்சி மாநாட்டை நடத்தும் முக்கிய பொறுப்பாகும். இந்தியா கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி ஜி20 தலைமை பொறுப்பை ஏற்றது.

அடுத்த ஆண்டு ஜி20 அமைப்புக்கு பிரேசில் தலைமை தாங்க உள்ளது. டெல்லி மாநாட்டின் நிறைவு நாளில் (செப்.10) தலைமை பதவியை பிரேசில் அதிபர் லூலாவிடம், இந்திய பிரதமர் மோடி ஒப்படைக்கிறார். பிரேசில் நாடு ஜி20 தலைவர் பதவியை டிசம்பர் 1ம் தேதி முறைப்படி ஏற்கும். இந்தியாவுக்கு முன், இந்தோனேசியா ஜி20 அமைப்புக்கு தலைமை ஏற்றது. 

2023-09-08 08:51 GMT

டெல்லி விமான நிலையத்தில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கை மத்திய மந்திரி அஸ்வினி குமார் சவுபே வரவேற்றார்.

2023-09-08 08:46 GMT

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பற்காக டெல்லி வந்தடைந்தார்.

2023-09-08 08:20 GMT

ஜி20 மாநாட்டில் பங்கேற்க வருகை தந்த ஆப்பிரிக்க யூனியன் தலைவர்...!

உலகமே தற்போது உற்று நோக்கும் ஒரு மாநாடாக நாளை மற்றும் நாளை மறுநாள் தலைநகர் டெல்லியில் நடைபெற உள்ள ஜி20 உச்சி மாநாடு மாறி வருகிறது. இந்த ஆண்டு ஜி-20 உச்சி மாநாட்டை இந்தியா தலைமை தாங்கி நடத்தி வருகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள ஜி20 கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் தலைவர்கள் தலைநகர் டெல்லிக்கு வருகை தந்த வண்ணம் இருக்கின்றனர். இந்தநிலையில், ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆப்பிரிக்க யூனியனின் தற்போதைய தலைவர் அசாலி அசோமானி டெல்லி வந்தடைந்தார்.

ஜி20 மாநாடடில் பங்கேற்க வரும் உலக நாட்டு தலைவர்களுக்கு டெல்லியில் இந்திரா காந்தி விமான நிலையத்தில் அரசு முறை வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. 

2023-09-08 07:20 GMT

ஜி20 உச்சி மாநாட்டையொட்டி டெல்லியில் உள்ள ஜமா மஸ்ஜித் அலங்கரிக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளது. 

2023-09-08 07:15 GMT

இத்தாலி பிரதமருக்கு கலைநிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு

மாநாட்டில் பங்கேற்க வந்த இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு டெல்லி விமான நிலையத்தில் கலாச்சார நடன நிகழ்ச்சியுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்