ஜி20 உச்சி மாநாடு: பைடனுடனான சந்திப்பு பயனுள்ளதாக இருந்தது- பிரதமர் மோடி

Update:2023-09-08 10:39 IST
Live Updates - Page 3
2023-09-08 07:04 GMT

ஜி20 மாநாடு - உலகத் தலைவர்களை தனித்தனியாக சந்திக்கிறார் பிரதமர் மோடி...!

ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வரும் உலகத்தலைவர்களை பிரதமர் மோடி தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.அமெரிக்கா, வங்கதேசம், மொரீசியஸ் நாட்டு தலைவர்களை இன்று சந்திக்கிறார் பிரதமர் மோடி.

டெல்லியில் 15-க்கும் அதிகமான உலக தலைவர்களுடன் இரு தரப்பு சந்திப்பு, ஆலோசனைக்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

2023-09-08 06:44 GMT

ஜி20 உச்சி மாநாடு நடைபெறும் பிரமாண்ட அரங்கம்.

2023-09-08 06:12 GMT

ஜனாதிபதி அளிக்கும் விருந்தில் தேவகவுடா பங்கேற்கமாட்டார்

ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்பாடு செய்துள்ள விருந்தில் நான் கலந்து கொள்ளமாட்டேன் என முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறியிருக்கிறார்.

‘என்னுடைய உடல்நலம் கருதி கொண்டு விருந்தில் கலந்து கொள்ளவில்லை. இதுகுறித்து அரசுக்கு நான் ஏற்கனவே தகவல் தெரிவித்துள்ளேன். ஜி-20 மாநாடு மாபெரும் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்'' என தேவகவுடா தெரிவித்துள்ளார்.

2023-09-08 06:06 GMT

பைடனுடன் பிரதமர் மோடி இன்று பேச்சுவார்த்தை

ஜி20 மாநாட்டில் பங்கேற்க டெல்லி வரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் இன்று இரவு பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்தியா-அமெரிக்கா உறவுகளை மேலும் வலுப்படுத்த பேச்சுவார்த்தை நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு இரவு விருந்து அளிக்கவும் பிரதமர் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

2023-09-08 05:35 GMT

ஜி20 மாநாட்டில் பங்கேற்க 500 தொழிலதிபர்களுக்கு அழைப்பிதழ்

உலக தலைவர்களை உபசரிக்கும் விதமாக நாளை இரவு ஜி20 விருந்து அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த விருந்திற்கு சுமார் 500 தொழிலதிபர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

https://www.dailythanthi.com/amp/News/India/mukesh-ambani-gautam-adani-among-500-businessmen-who-will-attend-g20-summit-dinner-1048075

2023-09-08 05:27 GMT

ஜி20 விருந்துக்கு முன்னாள் பிரதமர்களுக்கு அழைப்பு

ஜி20 உச்சி மாநாட்டில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் எச்.டி தேவகவுடாவுக்கு ஜி20 விருந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மாநில முதல்-மந்திரிகளுக்கும் இரவு உணவு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விருந்தில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி செல்கிறார். பல எதிர்க்கட்சிகளின் முதல்-மந்திரிகள் விருந்தில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.

2023-09-08 05:21 GMT

டெல்லி வந்தடைந்தார் அர்ஜென்டினா அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸ்..!

ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அர்ஜென்டினா அதிபர் ஆல்பர்டோ ஏஞ்சல் பெர்னாண்டஸ் டெல்லி வந்தடைந்தார்.

https://www.dailythanthi.com/amp/News/India/argentina-president-alberto-fernndez-arrives-in-delhi-for-the-g20-summit-1048073

2023-09-08 05:16 GMT

ஜோ பைடன் இன்று மாலை வருகிறார்

மாநாடு நாளை தொடங்குவதால் பெரும்பாலான தலைவர்கள் இன்று டெல்லியை வந்தடைகிறார்கள். இதில் முக்கியமாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இன்று மாலை 6.55 மணிக்கு டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்குகிறார். அவரை மத்திய சிவில் விமான போக்கு வரத்துத்துறை இணை மந்திரி வி.கே.சிங் வரவேற்கிறார்.

ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் ஜோ பைடன் வருவதில் திடீர் சந்தேகம் எழுந்தது. ஆனால் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதால், ஜி-20 உச்சி மாநாட்டில் அவரது பங்கேற்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

ஜோ பைடன் வருகையை முன்னிட்டு அமெரிக்க ஜனாதிபதிக்குரிய மிகவும் பாதுகாப்பு மிகுந்த காரான ‘தி பீஸ்ட் காடில்லாக்’ காரும் டெல்லி வருகிறது. அமெரிக்காவின் போயிங் சி-17 குளோபல்மாஸ்டர்-3 என்கிற போர் விமானம் மூலம் இந்த கார் எடுத்து வரப்படுகிறது. இந்த காரிலேயே ஜோ பைடன் டெல்லியில் பயணம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

2023-09-08 05:14 GMT

தலைவர்களின் வருகை

பிரமாண்டமான இந்த ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கும் தலைவர்கள் டெல்லியில் குவியத்தொடங்கி விட்டனர்.

இதில் முதல் நபராக நைஜீரிய அதிபர் போலா அகமது தினுபு கடந்த 5-ந்தேதி டெல்லி வந்தார். அவரை மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி எஸ்.பி.சிங் பாகெல் வரவேற்றார்.

அடுத்ததாக மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத் தன் மனைவியுடன் நேற்று காலை 6.15 மணிக்கு டெல்லி வருகை தந்தார். விமான நிலையத்தில் அவரை மத்திய கப்பல்துறை இணை மந்திரி ஸ்ரீபாத் யெசோ நாயக் வரவேற்றார்.

Tags:    

மேலும் செய்திகள்