ஜி20 உச்சி மாநாடு: பைடனுடனான சந்திப்பு பயனுள்ளதாக இருந்தது- பிரதமர் மோடி
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.;
அமெரிக்கா-இந்திய கூட்டாண்மை ஆற்றல் மிக்கது என்பதை நாங்கள் உறுதிப்படுத்துவோம் - அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில், “பிரதம மந்திரி, உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி. அமெரிக்கா-இந்திய கூட்டாண்மை வரலாற்றில் எந்த காலத்திலும் இல்லாததை விட இன்று வலுவானது, நெருக்கமானது மற்றும் ஆற்றல் மிக்கது என்பதை ஜி 20 முழுவதும் நாங்கள் உறுதிப்படுத்துவோம்” என்று அதில் ஜோ பைடன் பதிவிட்டுள்ளார்.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்: இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு
புதுடெல்லி,
ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்க உள்ள அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், பிரதமர் நரேந்திர மோடியுடனான தனது இருதரப்பு சந்திப்பின் போது, சீர்திருத்தப்பட்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராகும் தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளார்.
முன்னதாக ஜி20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வருகை தந்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இதனிடையே, ஜோ பைடனை சந்தித்தது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், “அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடனான சந்திப்பு பயனுள்ளதாக இருந்தது. இரு நாடுகள் இடையே பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து விவாதித்தோம். இந்தியா- அமெரிக்கா இடையிலான நட்புறவு உலக நன்மையை மேம்படுத்துவதில் தொடர்ந்து பெரும் பங்கு வகிக்கும்.” என்று அதில் தெரிவித்திருந்தார்.
நாளை தொடங்கும் ஜி-20 மாநாடு: டெல்லி வந்தார் நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே
புதுடெல்லி,
உலகின் அதிகாரம் மிகுந்த அமைப்புகளில் ஒன்றான ஜி-20 அமைப்பின் தலைமை பதவியை தற்போது இந்தியா அலங்கரித்து வருகிறது. இந்தியா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ரஷியா, சீனா போன்ற வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளை உள்ளடக்கிய இந்த அமைப்பின் உச்சி மாநாடு டெல்லியில் நாளையும் (சனிக்கிழமை), நாளை மறுநாளும் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
இந்தியா தலைமை தாங்கி நடத்தும் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதைப்போல உறுப்பினர் அல்லாத பல்வேறு நாடுகளும் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கின்றன.
உலக வல்லரசுகள் உள்பட முக்கியமான நாடுகளின் தலைவர்களை ஒரே நேரத்தில் வரவேற்க தயாராகும் இந்தியா, இதற்காக தலைநகரில் பிரமாண்ட ஏற்பாடுகளை செய்துள்ளது.
பிரமாண்டமான இந்த ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கும் தலைவர்கள் டெல்லியில் குவியத்தொடங்கி விட்டனர்.
இந்நிலையில் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே டெல்லி வந்தடைந்தார்.
ஜி20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வருகை தந்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இதனிடையே, ஜோ பைடனை சந்தித்தது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது;
”அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடனான சந்திப்பு பயனுள்ளதாக இருந்தது. இரு நாடுகள் இடையே பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து விவாதித்தோம். இந்தியா- அமெரிக்கா இடையிலான நட்புறவு உலக நன்மையை மேம்படுத்துவதில் தொடர்ந்து பெரும் பங்கு வகிக்கும்.” இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க தென்கொரிய ஜனாதிபதி யோன் சுக் யோல் டெல்லி விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.
ஜி20 மாநாட்டில் பங்கேற்க துருக்கி அதிபர் எர்டோகன் டெல்லி வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.
ஜி20 மாநாட்டில் பங்கேற்க ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயத் அல் நஹ்யன் டெல்லி வந்தடைந்தார்.