டெல்லியில் பாஜகவை தோற்கடிக்கக்கூடிய ஒரே கட்சி ஆம் ஆத்மி தான்: சஞ்சய் சிங்

பாஜகவை தோற்கடிப்பதே இந்தியா கூட்டணியில் உள்ள அனைவரின் நோக்கமாகும் என்று சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.;

Update:2025-01-09 17:13 IST

புதுடெல்லி,

70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 5-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 8-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது.

இந்த தேர்தலில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் தனியாக களம் காண்கின்றனர். பா.ஜ.க.வுக்கு எதிராக களத்தில் நிற்கும் ஆம் ஆத்மி கட்சி, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை தக்கவைக்க கடுமையாக உழைத்து வருகிறது.

இதற்கிடையே டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ் வாதி கட்சிகள் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், டெல்லி தேர்தலில் பாஜகவை தோற்கடிக்கக்கூடிய ஒரே கட்சி ஆம் ஆத்மி மட்டும் தான் என அக்கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார். மேலும் பாஜகவை தோற்கடிப்பதே இந்தியா கூட்டணியில் உள்ள அனைவரின் நோக்கமாகும். அதனால்தான் மற்ற கட்சிகள் எங்களுக்கு (ஆம் ஆத்மி) ஆதரவளிக்க வருகின்றன. அதற்காக நாங்கள் அவர்களுக்கு நன்றி கூறுகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்