சண்டையை தடுக்க சென்ற நபர் மாரடைப்பால் உயிரிழப்பு - அதிர்ச்சி சம்பவம்
சண்டையை தடுக்க சென்ற நபர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் கவுதம புத்தா நகர் மாவட்டம் ரோசா ஜலால்பூர் கிராமத்தில் நேற்று விபத்து ஏற்பட்டது. ரவிகாந்த் ஓட்டிச்சென்ற பைக் முகேஷ் குமார் ஓட்டிச்சென்ற ஆட்டோ மீது மோதியது.
இந்த சம்பவத்தில் இருவருக்கும் இடையே நடுரோட்டில் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சாலையோரம் நடந்து சென்ற ராஜ்குமார் சண்டையை தடுக்க சென்றுள்ளார். வாக்குவாதத்தில் ஈடுபட்ட இருவரிடமும் சண்டையிட வேண்டாமென ராஜ்குமார் கூறியுள்ளார். அப்போது திடீரென ராஜ்குமாருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
இதனால், அவர் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்தார். இதையடுத்து அவரை மீட்டர் அருகில் இருந்தவர்கள் மருத்துவமனையில் அனுமத்தனர். ராஜ்குமாரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் மாரடைப்பு ஏற்பட்டு ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.