ஜி20 உச்சிமாநாட்டை நடத்துவதில் இந்தியா மகிழ்ச்சியடைகிறது - பிரதமர் மோடி

பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் வரும் 9,10ம் தேதிகளில் ஜி20 உச்சிமாநாட்டை நடத்துவதில் இந்தியா மகிழ்ச்சியடைகிறது. ஜி20 மாநாட்டை முதல் முறையாக இந்தியா தலைமை தாங்கி நடத்துகிறது. அடுத்த 2 நாட்களுக்கு உலக நாடுகளின் தலைவர்களுடன் மிகவும் ஆரோக்கியமான உரையாடல் இருக்கும் என நான் நம்புகிறேன்.

டெல்லியில் நடைபெறும் ஜி20 உச்சிமாநாடு மனிதத்தை மையப்படுத்தியதாகவும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாகவும் அமையும் என நான் நம்புகிறேன்.

நமது கலாச்சார பண்பாட்டில் வேரூன்றி ‘வசுதேவ குடும்பம்’ என்ற கருப்பொருளை கொண்டு இந்தியா ஜி20 அமைப்பிற்கு தலைமை தாங்கியுள்ளது. ஒரே நாடு, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்பது முழு உலகமும் ஒரே குடும்பம் என்ற நமது உலக கண்ணோட்டத்துடன் ஆழமாக எதிரொலிக்கிறது. நட்பு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்த நான் சில நாட்டு தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளேன். இந்தியாவின் விருந்தோம்பலால் நம் விருந்தினர்கள் மகிழ்ச்சியடைவார்கள் என நம்புகிறேன்’ என தெரிவித்துள்ளார். 

Update: 2023-09-08 12:26 GMT

Linked news