அரியானா சட்டசபையில் இருந்து முன்னாள் முதல்-மந்திரி மகன் இடைநீக்கம்

அரியானா சட்டசபையில் இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் ஒரே எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அபய் சிங் சவுதாலா.

Update: 2023-03-20 20:19 GMT

சண்டிகார், 

அரியானா சட்டசபையில் இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் ஒரே எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அபய் சிங் சவுதாலா. முன்னாள் முதல்-மந்திரி ஓம்பிரகாஷ் சவுதாலாவின் மகனான இவர், நேற்று சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது பேசினார். நிலத்தடி நீர்மட்டம் தொடர்பாக கேள்விகளை எழுப்பிய அவர், சபாநாயகர் ஜியான்சந்த் குப்தாவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அதிருப்தி அடைந்த முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார், அபய் சிங் சவுதாலா எம்.எல்.ஏ.வுக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும், அபய் சிங் சவுதாலாவின் செயலால் அதிருப்தி அடைந்த சபாநாயகர், அவரை நேற்று மீதமுள்ள நேரத்தில் சட்டசபை நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதித்து இடைநீக்கம் செய்தார். இதனால் உறுப்பினர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. இவர் சட்டசபையில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுவது ஒரு மாதத்தில் இது 2-வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்