பெங்களூருவில் குடோனில் பதுக்கிய ரூ.1¼ கோடி இ-சிகரெட் பறிமுதல்; 2 பேர் கைது

பெங்களூருவில் குடோனில் பதுக்கிய ரூ.1¼ கோடி மதிப்பிலான இ-சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2023-05-03 18:45 GMT

பெங்களூரு:

பெங்களூருவில் குடோனில் பதுக்கிய ரூ.1¼ கோடி மதிப்பிலான இ-சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2 பேர் கைது

நாட்டில் இ-சிகரெட்டுகள் விற்பனைக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த நிலையில், பெங்களுருவில் சட்டவிரோதமாக இ-சிகரெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, இ-சிகரெட் விற்கும் கும்பலை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். பெங்களூரு அல்சூர்கேட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கும்பாரபேட்டையில் ஒரு கட்டிடத்தின் 2-வது மாடியில் உள்ள குடோனில் இ-சிகரெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அந்த குடோனில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அங்கு இ-சிகரெட்டுகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, குடோனை வாடகைக்கு எடுத்து பதுக்கி வைத்திருந்ததாக சித்தலிங்கா (வயது 30), சச்சின் சவுத்ரி (23) என்று தெரிந்தது.

ரூ.1¼ கோடி இ-சிகரெட்டுகள்

அவர்கள் 2 பேரும் இ-சிகரெட்டுகளை சட்டவிரோதமாக வாங்கி, நகரில் உள்ள கடைகளுக்கு சப்ளை செய்து வந்தது தெரியவந்தது. எளிதில் பணம் சம்பாதிக்கும் ஆசையில் அவர்கள் இந்த சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு இருந்தனர். கைதானவர்களிடம் இருந்து ரூ.1¼ கோடிக்கு இ-சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் 2 பேர் மீதும் அல்சூர்கேட் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சித்தலிங்கா, சச்சின் சவுத்ரியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட இ-சிகரெட்டுகள் பெங்களூரு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. அவற்றை மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சரணப்பா பார்வையிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்