சத்தீஸ்கரில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவு

சத்தீஸ்கரில் 4.3 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Update: 2022-07-11 21:47 GMT

ராய்பூர்,

சத்தீஸ்கர் கோரியா மாவட்டத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆகப் பதிவாகியுள்ளதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.

கோரியா மாவட்டத்தின் பைகுந்தப்புருக்கு வடமேற்கே 16 கி.மீ தொலைவில் காலை 8.10 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் 23.58 டிகிரி வடக்கு அட்சரேகையிலும் 82.58 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இந்த நிலநடுக்கம் 10 கிமீ ஆழத்திலும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்