டெல்லியில் கடந்த ஆண்டில் 4,469 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு - 9 பேர் பலி

டெல்லியில் கடந்த ஆண்டில் மட்டும் 4,469 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2023-01-05 09:09 GMT

புதுடெல்லி,

தேசிய தலைநகர் டெல்லியில் கடந்த ஆண்டில் 4,469 டெங்கு காய்ச்சல் வழக்குகள் பதிவாகியுள்ளன. மேலும் கடந்த ஆண்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும் டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது. தரவுகளின்படி, டிசம்பர் மாதம் கடைசி வாரத்தில் மட்டும் 108 டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

டெல்லியில் கடந்த ஆண்டு 263 மலேரியா வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் மலேரியா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார். டிசம்பர் கடைசி வாரத்தில் மட்டும் 5 பேர் மலேரியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கடந்த ஆண்டில் டெல்லியில் 48 பேர் சிக்கன் குனியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் சிக்கன் குனியாவால் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்