திருப்பதி லட்டு விவகாரம்: தேவஸ்தானம் அறிக்கை அளிக்க சந்திரபாபு நாயுடு உத்தரவு

ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் திருப்பதி லட்டு தயாரிக்க விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார்.

Update: 2024-09-20 09:38 GMT

அமராவதி,

ஆந்திராவில் இந்த ஆண்டு நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வெற்றிப் பெற்று ஆட்சிக்கு வந்தது முதல், முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி, முன்பு ஆட்சியில் இருந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மீது தொடர்ந்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும், புகார்களையும் முன்வைத்து வருகிறது. குறிப்பாக திருப்பதி ஏழுமலையான் கோவில் தொடர்பான குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், முன்னாள் முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சியில், திருப்பதி லட்டு தயாரிக்க விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். சந்திரபாபு நாயுடுவின் இந்த குற்றச்சாட்டை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இந்தநிலையில், திருப்பதி லட்டு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். லட்டு விவகாரத்தில் இன்று மாலைக்குள் முழுமையான அறிக்கை அளிக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வாகத்திற்கு முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். முதல்-மந்திரி அறிக்கை கேட்டு உத்தரவிட்டுள்ள நிலையில், இன்று மாலைக்குள் தேவஸ்தானம் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆந்திராவில் லட்டு விவகாரம் பூதாகரமாகியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்