டெல்லி சிலிண்டா் வெடித்து விபத்து - 3 பேர் காயம்
டெல்லியில் குடியிருப்பு கட்டிடத்தில் சிலிண்டா் வெடித்த விபத்தில் சிக்கி 3 போ் காயமடைந்துள்ளனா்.
புதுடெல்லி,
தெற்கு டெல்லி சத்தார்பூர் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் இரவு பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்து சம்பவத்தில் கட்டிடத்தின் இரண்டு தளங்களும் இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. 5 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினா், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த விபத்து சம்பவத்தில் 3 போ் காயமடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். சமையல் எரிவாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் கட்டிடத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது தளம் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.