மத மாற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டெல்லி சமூக நலத்துறை மந்திரிக்கு கடும் எதிர்ப்பு - ராஜினாமா செய்வதாக அறிவிப்பு!

பாஜகவிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, டெல்லி மந்திரி ராஜேந்திர பால் கவுதம் இன்று ராஜினாமா செய்துள்ளார்.

Update: 2022-10-09 13:24 GMT

புதுடெல்லி,


டெல்லியில் வெள்ளிக்கிழமை அன்று நடந்த மத மாற்ற நிகழ்ச்சியில் டெல்லி சமூக நலத்துறை மந்திரி ராஜேந்திர பால் கவுதம் கலந்து கொண்டதற்கு பாஜகவிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. 


இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் பவுத்த மதத்திற்கு மாறுவதாக உறுதிமொழி எடுத்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கெவுதமை பதவி நீக்கம் செய்யுமாறு கெஜ்ரிவாலிடம் பாஜகவினர் கோரினர்.


மேலும், வதோதராவில் நேற்று நடந்த ஆம் ஆத்மியின் 'திரங்கா பேரணி'க்கு முன்னதாக ஆளும் பாஜக ஆதரவாளர்கள் ஆம் ஆத்மி கட்சி பேனர்களை கிழித்துள்ளனர். 


பாஜகவிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, டெல்லி சமூக நலத்துறை மந்திரி ராஜேந்திர பால் கவுதம் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 


இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, "இன்று மகரிஷி வால்மீகி ஜி யின் வெளிப்பாடு நாள் மற்றும் மான்யவர் கன்ஷி ராம் சாஹேப் அவர்களின் நினைவு நாள். அப்படியொரு நாளில், தற்செயலாக இன்று நான் பல தடைகளில் இருந்து விடுபட்டுள்ளேன். 


இன்று நான் மீண்டும் பிறந்துள்ளேன். இப்போது, நான் இன்னும் உறுதியாக, சமூகத்தின் மீதான உரிமைகளுக்காக மற்றும் அட்டூழியங்களுக்கு எதிராக எந்த தடையுமின்றி உறுதியாக தொடர்ந்து போராடுவேன்" என்று தெரிவித்தார்.


முன்னதாக பாஜகவின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் விதத்தில் குஜராத் மாநிலம் வதோதராவில் நேற்று நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சி பேரணியில் கலந்து கொண்டு பேசிய கெஜ்ரிவால், "ஜெய் ஸ்ரீராம்" என்று கோஷமிட்டார்.  


அவர் பேசுகையில், "நான் அனுமனின் சீடன், அவர்கள் கம்சனின் வழித்தோன்றல்கள். நான் பிறந்தது ஜென்மாஷ்டமி அன்று. ஆகவே கடவுள் என்னை  'ஊழல் செய்பவர்களை அழித்து விடுங்கள என்ற ஒரு சிறப்பு நோக்கத்துடன் அனுப்பியுள்ளார். 


இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்