இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 72 ஆக உயர்வு
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 72 ஆக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக 50-க்குள் பதிவாகி வந்த தினசரி கொரோனா பாதிப்பு, நேற்று 72 ஆக உயர்ந்தது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 99 ஆயிரத்து 438 ஆக உயர்ந்தது.
24 மணி நேரத்தில், கொரோனாவில் இருந்து 35 பேர் குணம் அடைந்தனர். இதுவரை மொத்தம் 4 கோடியே 44 லட்சத்து 67 ஆயிரத்து 55 பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் 11 அதிகரித்தது. மொத்தம் 348 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா உயிரிழப்பு எதுவும் இல்லாததால், மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 32 ஆயிரத்து 35 ஆக நீடிக்கிறது.