ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்; சி.ஆர்.பி.எப் வீரர் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீரின் புல்வமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எப் வீரர் உயிரிழந்தார்.

Update: 2022-07-17 10:45 GMT

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரின் புல்வமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எப் வீரர் உயிரிழந்தார். தெற்கு காஷ்மீர் பகுதியான கங்கூ பகுதியில் சி.ஆர்.பி.எப் வீரர்களும் போலீசாரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதாகவும் அப்போது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எப் வீரர் உயிரிழந்து விட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறும் போது, மத்திய ரிசர்வ் படையை சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் வினோத் குமார் பயங்கரவாதிகள் தாக்குதலில் படுகாயம் அடைந்தார். உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்" என்று தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்