குஜராத்தில் 10 லட்சம் பேருக்கு அரசு வேலை ; காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு

குஜராத்தில் 10 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Update: 2022-11-12 09:12 GMT

அகமதாபாத்,

குஜராத் சட்டமன்ற தேர்தல் வரும் டிசம்பர் 1 மற்றும் 5 ஆம் தேதிகளில் இரு கட்டமாக நடைபெறுகிறது. இந்த தேர்தலை முன்னிட்டு அனல் பறக்கும் பிரசாரத்தில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், ஆம் அத்மி கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இந்தநிலையில், காங்கிரஸ் கட்சி இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதில், குஜராத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் தோறும் ரூ. 3 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். ரூ. 500க்கும் எரிவாயு சிலிண்டர்கள். தனியாக வசிக்க்கும் பெண்கள், வயதான பெண்மணிகள்,விதவைப்பெண்களுக்கு மாதம் தோறும் ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்