மனீஷ் சிசோடியா மீது மேலும் ஒரு வழக்கு பதிவு - சி.பி.ஐ. நடவடிக்கை

மனீஷ் சிசோடியா உள்ளிட்ட 7 பேர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சி.பி.ஐ. மேலும் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளது.

Update: 2023-03-16 07:43 GMT

புதுடெல்லி,

டெல்லியில் மதுபான கொள்கை அமலாக்கத்தில் ஊழல் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு மணீஷ் சிசோடியாவிடம் சி.பி.ஐ. கடந்த பிப்ரவரி 26-ந்தேதி தெரிவித்திருந்தது. அவரிடம் நடந்த 8 மணிநேர விசாரணைக்கு பின் சி.பி.ஐ. சிசோடியாவைக் கைது செய்து சிறையில் அடைத்தது.

அதனைத் தொடர்ந்து மத்திய புலனாய்வு அமைப்பு மணீஷ் சிசோடியாவை கோர்ட்டு அனுமதியுடன் காவலில் எடுத்து அவரிடம் 7 நாட்கள் விசாரணை நடத்தியது. இதையடுத்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மனீஷ் சிசோடியாவை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து, மணீஷ் சிசோடியா திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் மனீஷ் சிசோடியா உள்ளிட்ட 7 பேர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சி.பி.ஐ. மேலும் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நேர்மையற்ற முறையில் சொத்துக்குவிப்பு, குற்றச் சதி, ஏமாற்றும் நோக்கத்திற்காக போலி ஆவணம் தயாரித்தல், போலி ஆவணங்களைப் பயன்படுத்துதல், குற்றவியல் முறைகேடு ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்