ஆஸ்திரேலியாவில் விசா பெற திருமணம் செய்து கொண்ட சகோதரன்-சகோதரி

சகோதரருக்கு ஆஸ்திரேலிய விசா உள்ளது. தம்பதிகளில் ஒருவருக்கு விசா இருந்தால், மற்றவருக்கு விசா கிடைப்பது அங்கு எளிது.

Update: 2023-02-02 04:59 GMT

ஜலந்தர்

ஆஸ்திரேலிய விசா பெறுவதற்காக உடன்பிறந்த சகோதர சகோதரி திருமணம் செய்து கொள்கிறார்கள் (31 ஜனவரி 2019). மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த சகோதரர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

சகோதரருக்கு ஆஸ்திரேலிய விசா உள்ளது. தம்பதிகளில் ஒருவருக்கு விசா இருந்தால், மற்றவருக்கு விசா கிடைப்பது அங்கு எளிது.

இந்த சட்டத்தை வைத்து அவர்கள் பஞ்சாபில் உள்ள ஒரு குருத்வாராவில் திருமணம் செய்து கொண்டனர். அருகிலுள்ள பதிவு அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்தனர்.

அதன் பிறகு, அவர் தனது கணவருடன் ஆஸ்திரேலிய விசாவிற்கு விண்ணப்பித்தார். விண்ணப்பித்தபடி விசா பெற்று ஆஸ்திரேலியா சென்றுள்ளனர்.இதனிடையே இரு நாட்டு சட்ட அமைப்புகளையும் அவர்கள் ஏமாற்றியது தெரியவந்தது.

அவர்கள் இருக்கும் இடம் குறித்த சரியான தகவல்கள் கிடைக்காததால் சட்ட நடவடிக்கை எடுப்பதில் தடைகளை உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதை கண்டறிந்தவுடன் தேவையான நடவடிக்கைகளை எடுக்கப்படும் என கூறி உள்ளனர்.

இதுகுறித்து இந்த வழக்கை விசாரித்து வரும் இன்ஸ்பெக்டர் ஜெய் சிங் கூறியதாவது:-

சகோதரன் ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிப்பவர் என்றும், சகோதரி போலி ஆவணங்களை தயாரித்ததாகவும், அவர்கள் முதலில் ஒரு குருத்வாராவிடமிருந்து திருமணச் சான்றிதழைப் பெற்று, துணைப் பதிவாளரிடம் பதிவு செய்ததாக எங்களுக்குத் தெரியவந்துள்ளது.

குடியேற்ற ஊழலில் அவரது சகோதரர் மற்றும் சகோதரி உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சம்பந்தப்பட்டு உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்