புனே சென்ற ஏர் ஆசியா விமானம் மீது பறவை மோதல்; புவனேஸ்வரில் அவசர தரையிறக்கம்

மராட்டியத்தின் புனே நகர் நோக்கி சென்ற ஏர் ஆசியா விமானம், பறவை மோதலால் புவனேஸ்வரில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது.

Update: 2023-03-02 14:35 GMT


புனே,


ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் உள்ள பிஜூ பட்னாயக் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் ஆசியா விமானம் ஒன்று பயணிகளுடன் புறப்பட்டு சென்று உள்ளது.

எனினும், திடீரென விமானம் மீது பறவை ஒன்று மோதி உள்ளது. இதனால், பாதுகாப்பை கவனத்தில் கொண்டு உடனடியாக விமானம் புவனேஸ்வரில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது.

விமானத்தில் உள்ள பயணிகள் அனைவரும் பாதுகாப்புடன் உள்ளனர் என விமான நிலைய நிர்வாகம் கூறியுள்ளது. விமானத்திற்கு ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

இதனால் வேறு தொடர் விமானங்களை பிடிக்க காத்திருக்கும் பயணிகளின் பாதிப்புகளை, குறைக்கும் வகையிலான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்று ஏர் ஆசியா விமான நிறுவனம் தெரிவித்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்