ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த ஜோடோ யாத்திரை நடைபெறவில்லை; ஜெய்ராம் ரமேஷ்
ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அடையாளப்படுத்த பாரத் ஜோடோ யாத்திரை நடைபெறவில்லை என்று ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.
புதுடெல்லி,
ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அடையாளப்படுத்த பாரத் ஜோடோ யாத்திரை நடைபெறவில்லை என்று ஜெய்ராம் ரமேஷ் கூறினார். இதுதொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:
இந்திய ஒற்றுமை நடை பயணம் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அடையாளப்படுத்த முன்னெடுக்கப்படவில்லை. ஒற்றுமை நடைப்பயணம் ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் சித்தாந்த ரீதியிலான நடைப்பயணம். இது ஒருவரின் தனிப்பட்ட நடைப்பயணம் அல்ல. இந்த ஒற்றுமை நடைப்பயணத்தில் பொருளாதார சமத்துவமின்மை, சமூகத்தை பிளவுப்படுத்துதல் மற்றும் அரசியல் சர்வாதிகாரம் ஆகிய மூன்று முக்கிய பிரச்னைகள் குறித்து ராகுல் காந்தி தொடர்ந்து கேள்வியெழுப்பி வருகிறார்" என்றார்