காதலி தற்கொலை செய்ததால் வாலிபர் தூக்குப்போட்டு சாவு
காதலி தற்கொலை செய்ததால் வாலிபர் தூக்குப்போட்டு கொண்டார்.
பல்லாரி: கர்நாடக மாநிலம் பல்லாரி (மாவட்டம்) டவுன் பகுதியை சேர்ந்தவர் நாஜியா பானு. இவரது கணவர் போலீஸ்காரர் ஆவார். இவா்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. ஆனால் கணவருடன் வாழ பிடிக்காமல், நாஜியா பானு விவாகரத்து பெற்று தனியாக வசித்து வந்தார். அவருக்கும், மஞ்சுநாத் என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்யவும் முடிவு செய்திருந்தார்கள்.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு நாஜியா பானு தற்கொலை செய்து கொண்டாா். தனது சாவுக்கு நானே காரணம், எனது குழந்தைக்கும், தாய்க்கும் துரோகம் செய்து விட்டேன் என்று தற்கொலை கடிதமும் நாஜியா பானு எழுதி வைத்திருந்தார். காதலி தற்கொலை செய்தது பற்றி நேற்று முன்தினம் தான் மஞ்சுநாத்திற்கு தெரியவந்தது. இதையடுத்து, கவுல் பஜார் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் தனது வீட்டில் மஞ்சுநாத் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.