அக்னிபத் போராட்டம்: பீகாரில் பள்ளி பேருந்து மீது தாக்குதல்..! கண்ணீருடன் தவித்த குழந்தைகள்...!

அக்னிபத் திட்டத்திற்கு வடமாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

Update: 2022-06-17 12:00 GMT

பாட்னா,

ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றில் 4 ஆண்டுகளுக்கு இளைஞர்களை தேர்வு செய்யும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு வடமாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடக்கும் பீகாரில் ராணுவ வேலைவாய்ப்பை எதிர்நோக்கி உள்ள இளைஞர்கள் 3-வது நாளாக தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், பீகார் மாநிலம் தர்பங்கா பகுதியில் பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த பள்ளி வேன் ஒன்று போராட்டக்காரர்கள் இடையே சிக்கிக்கொண்டது. போராட்டக்காரர்கள் மத்தியில் சிக்கிய பள்ளி பேருந்தில் உள்ளே சுமார் 20 மாணவர்கள் இருந்தனர். உள்ளே இருந்த மாணவர்கள் போராட்டத்தில் பயத்தில் அழுதபடியே இருந்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பகிரப்பட்டது.

இதனையடுத்து போராட்டம் நடந்த பகுதிக்கு விரைந்த அம்மாநில காவல்துறையினர் போராட்டக்காரர்களிடமிருந்து பேருந்தை பத்திரமாக மீட்டு குழந்தைகளை பாதுகாப்பாக வெளியேற்றினர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்