2 பயங்கரவாதிகளுக்கு தலா 7 ஆண்டு கடுங்காவல் சிறை -என்.ஐ.ஏ. கோர்ட்டு தீர்ப்பு

நாசவேலையில் ஈடுபட திட்டமிட்ட 2 பயங்கரவாதிகளுக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து என்.ஐ.ஏ. கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

Update: 2023-09-22 21:47 GMT

பெங்களூரு:-

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் கடந்த 2018-ம் ஆண்டு குண்டுவெடிப்பை அரங்கேற்ற பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டது. இந்த நிலையில் என்.ஐ.ஏ. சோதனையில் 12 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் கைதானவர்கள் அனைவரும் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் புத்தகயா, ஜார்கண்ட் பகுதிகளில் பயங்கரவாத தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டிவிட்டு பெங்களூருவில் பதுங்கியதும், பின்னர் பெங்களூருவில் நாசவேலையில் ஈடுபட தயாரானதும் தெரியவந்தது. இந்த வழக்கு விசாரணை பெங்களூரு என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் 10 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டு விட்டது.

உசேன் (வயது 31), ஆசிப் (27) ஆகிய 2 பயங்கரவாதிகளுக்கு மட்டும் தண்டனை வழங்கப்படாமல் இருந்தது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதில் அவர்கள் 2 பேருக்கும் தலா 7 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும், ஆசிப்புக்கு ரூ.36 ஆயிரமும், உசேனுக்கு ரூ.33 ஆயிரமும் அபராதம் விதித்து என்.ஐ.ஏ. கோர்ட்டு உத்தரவிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்