கட்சி பொதுக்கூட்டத்தில் மேடை சரிந்து விபத்து: 5 பேர் காயம் - அதிர்ச்சி வீடியோ
பொதுக்கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பேசிக்கொண்டிருந்தபோது மேடை சரிந்தது.
லக்னோ,
உத்தரபிரதேசத்தில் சுகல்தேவ் பாரதிய சமாஜ் என்ற கட்சி உள்ளது. இக்கட்சியின் தலைவராக ஓம்பிரகாஷ் ராஜ்பார் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், அம்மாநிலத்தின் சீதாபூர் மாவட்டத்தில் சுகல்தேவ் பாரதிய சமாஜ்யின் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் மேடையில் ஏறி கட்சி நிர்வாகிகள் பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது, மேடையின் பின்புறம் திடீரென சரிந்து விழுந்தது. இதில், மேடையின் பின்புறம் நின்றுகொண்டிருந்த கட்சி நிர்வாகிகள் கீழே விழுந்தனர். இதனால், கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த சம்பவத்தில் 5 பேர் காயமடைந்தனர். இதையடுத்து காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பொதுக்கூட்டத்தில் மேடை சரிந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.