பண்டிகை காலத்தில் பயணிகள் வசதிக்காக கூடுதலாக 32 ரெயில் சேவைகள்; இந்திய ரெயில்வே அறிவிப்பு

நாடு முழுவதும் பயணிகள் வசதிக்காக பண்டிகை காலத்தில் கூடுதலாக 32 ரெயில் சேவைகள் இயக்கப்படும் என இந்திய ரெயில்வே அறிவித்து உள்ளது.;

Update:2022-10-18 16:16 IST



புதுடெல்லி,


நாடு முழுவதும் தீபாவளி, சத் பூஜை உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வரவிருக்கின்றன. இதனை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் மக்களின் கூட்டம் அலைமோதுகிறது. பண்டிகை காலத்தில் உடுத்த புது ஆடை, பலகாரம் உள்ளிட்ட பொருட்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதேபோன்று, வெளியூர்களில் பணிபுரிபவர்கள் இந்த பண்டிகை காலத்தில் தங்களது சொந்த ஊருக்கு திரும்புவது வழக்கம். அவர்களின் பயண வசதிக்காக கூடுதல் ரெயில் சேவைகளை இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், இந்திய ரெயில்வே அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தியில், ரெயில் பயணிகள் வசதிக்காக பண்டிகை காலத்தில் கூடுதலாக 32 ரெயில் சேவைகள் இயக்கப்படும் என இந்திய ரெயில்வே அறிவித்து உள்ளது.

இதற்கு முன்பு, 179 ரெயில் சேவைகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது அறிவிக்கப்பட்ட சேவையையும் சேர்த்து மொத்தம் 211 சிறப்பு ரெயில் சேவைகள் இயக்கப்படும். இதன்படி, 2,561 முறை ரெயில் சேவை இயங்கும். நாடு முழுவதும் உள்ள முக்கிய பகுதிகளை இந்த சிறப்பு ரெயில்கள் இணைக்கும் வகையில் சேவை திட்டமிடப்பட்டு உள்ளது என அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்