ஆம்னி பஸ்சில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த டிரைவர்

பஸ்சில் மற்ற பயணிகள் இருக்கும்போதே டிரைவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2024-07-30 16:07 GMT

ஐதராபாத்,

தெலுங்கானாவின் நிர்மல் மாவட்டத்தில் இருந்து ஆந்திரா நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் ஸ்லீப்பர் பஸ்சின் டிரைவரால் 26 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திங்கள்கிழமை நள்ளிரவில் தனியார் பஸ் ஐதராபாத் நகரில் இருந்தபோது நடந்த சம்பவம் குறித்து அந்தப் பெண் 100 க்கு அழைத்து உதவிகோரி உள்ளார். இதனையடுத்து, போலீசார் அந்த பேருந்தை நிறுத்தி டிரைவரை கைது செய்ய முயன்றனர். அப்போது குற்றம் சாட்டப்பட்ட டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விவகாரம் குறித்து போலீசார் தரப்பில் கூறியதாவது:- தப்பியோடிய டிரைவர் ஓடும் பஸ்சில் அந்த பெண்ணின் வாயில் போர்வையை வைத்து அடைத்துவிட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது பயணிகள் பலரும் அந்த பஸ்சில் இருந்துள்ளனர். பஸ்சை ஓட்டி வந்த மற்றொரு டிரைவரை காவலில் எடுத்து விசாரித்து வருகிறோம் என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்