தீபாவளி நாளில் ராணுவ வீரர்களுக்காக விளக்கேற்றுவோம் - பிரதமர் மோடி

நாட்டை பாதுகாக்க தைரியத்துடன் போராடும் நமது வீரர்களுக்காக விளக்கேற்றுவோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Update: 2020-11-13 14:29 GMT
புதுடெல்லி,

நாடு முழுவதும் நாளை (சனிக்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நமது நாட்டை பாதுகாக்க தைரியத்துடன் போராடும் ராணுவ வீரர்களுக்காக, தீபாவளி பண்டிகையன்று விளக்கேற்றுவோம். நமது வீரர்களின் தைரியத்திற்கு, நன்றியை வெளிப்படுத்துவதற்கு வார்த்தைகளால் மட்டும் முடியாது. எல்லையை பாதுகாக்கும் வீரர்களின் குடும்பத்திற்கும் நாம் கடமைப்பட்டுள்ளோம் என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்