பெங்களூருவில் ஐ.எப்.எஸ். அதிகாரி தற்கொலை

பெங்களூருவில் ஐ.எப்.எஸ். அதிகாரி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2019-09-08 19:42 GMT
பெங்களூரு,

பெங்களூரு எலகங்கா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் அவதார் சிங் (வயது 52). ஐ.எப்.எஸ். அதிகாரியான இவர் மல்லேசுவரத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் தலைமை அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவரது சொந்த ஊர் அரியானா மாநிலம் ஆகும். அவதார் சிங்கிற்கு மனைவி, 2 குழந்தைகளும் உள்ளனர்.

நேற்று காலை நடைபயிற்சிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்த அவர், வீட்டின் படுக்கை அறைக்கு சென்றார். பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி கதவை திறக்கும்படி பலமுறை கூறியும் அவதார் சிங் கதவை திறக்கவில்லை.

அக்கம் பக்கத்தினர் உதவியோடு வீட்டுக்கதவை உடைத்து உள்ளே சென்றபோது, அவதார் சிங் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அறிந்ததும் எலகங்கா நியூடவுன் போலீசார் விரைந்து வந்து அவதார் சிங்கின் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.

விசாரணையில், அவருக்கு நீரிழிவு நோய் இருந்ததும், அதனால் மனதளவில் அவர் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், அதன் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் போலீ சார் சந்தேகிக்கின்றனர். இருப்பினும் வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்