குடும்ப வாழ்க்கை குறித்து அனுபவம் இல்லாதவர்: எனது குடும்பத்தை பற்றி விமர்சிப்பதா? - பிரதமர் மோடிக்கு, சரத்பவார் பதிலடி
குடும்ப வாழ்க்கை பற்றி அனுபவம் இல்லாதவர் எனது குடும்பத்தை விமர்சிப்பதா? என பிரதமர் மோடிக்கு சரத்பவார் பதிலடி கொடுத்துள்ளார்.
புனே,
மராட்டிய மாநிலம் வார்தாவில் கடந்த 1-ந் தேதி நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை அவர் கடுமையாக விமர்சித்ததுடன், அவரின் குடும்ப பிரச்சினையால் கட்சியில் பல்வேறு குளறுபடிகள் ஏற்படுவதாக குறிப்பிட்டார்.
மேலும் “தேசியவாத காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் தலைவிரித்தாடுகிறது. சரத்பவாரின் பிடியில் இருந்து கட்சி நழுவி விட்டது. கட்சியின் அதிகாரம் சரத்பவாரின் உறவினரான அஜித்பவார் கட்டுப்பாட்டுக்கு சென்றுவிட்டது. அதனால் தான் தேர்தலின்போது சீட் ஒதுக்குவதில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டது” என தெரிவித்தார்.
இந்த நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவன தலைவர் சரத்பவார் நேற்று பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நான் அவருக்கு கூற விரும்புவது என்னவென்றால் சகோதரர்களான நாங்கள் பண்பட்ட சூழ்நிலையில் வளர்க்கப்பட்டவர்கள். எங்கள் தாய் நல்லொழுக்கத்தை எங்களுக்கு போதித்துள்ளார்.
எங்கள் சகோதரர்கள் அனைவரும் அவர்களின் சொந்த துறைகளில் புகழ்பெற்று விளங்குகின்றனர்.
குடும்பம் குறித்த எந்த ஒரு அனுபவமும் இல்லாத ஒருவர் அல்லது தனது குடும்பம் தற்போது எங்கே இருக்கிறது என்று எந்த எண்ணமும் இல்லாதவர், மற்றவர்கள் குடும்பம் குறித்த விவரங்களை ஆராய முயற்சி செய்கிறார்.
தங்கள் தோல்விகளை மூடி மறைப்பதற்காக அவர்கள் சோனியாகாந்தியின் குடும்பத்தினரை குறைகூறி வந்தனர். தற்போது எனது குடும்பத்தையும் அந்த பட்டியலில் சேர்த்துவிட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.