11 புத்தம் புதிய பட்டு ரகங்கள் அறிமுகம்.. ஆரெம்கேவியுடன் பண்டிகையை கொண்டாட தயாராகுங்கள்..!


2024 இவ்வருட பண்டிகை காலத்திற்கு என ஆரெம்கேவி அறிமுகப்படுத்தி இருக்கும் புத்தம் புதிய புடவைகள்.

1924 ஆம் ஆண்டு, முதல் கடையை திருநெல்வேலியில் துவங்கியதில் இருந்து, இன்று வரை நூறாண்டு காலமாக ஆரெம்கேவி வாடிக்கையாளர்களின் அன்பாலும், வியாபாரிகளின் நம்பிக்கையாலும் எங்களது நெசவாளர்கள் மற்றும் பணியாளர்களின் அர்ப்பணிப்புள்ள அயராத உழைப்பாலும் எட்ட முடியாத சிகரத்தை எட்டி இருக்கிறது.

கடந்த நூறாண்டுகளாக தனித்துவமிக்க 100 புடவைகளுக்கு மேல் அறிமுகம் செய்து வைத்திருக்கும் ஆரெம்கேவி இந்த வருடம் மேலும் 11 புத்தம் புதிய தனித்துவமான சாதனைகளோடு உருவாக்கப்பட்ட புடவைகளை அறிமுகப்படுத்துகிறது.

2024 இவ்வருட பண்டிகை காலத்திற்கு என ஆரெம்கேவி அறிமுகப்படுத்தி இருக்கும் புத்தம் புதிய புடவைகள்.

4000 விதவிதமான இயற்கை வண்ண பட்டுபுடவை

இயற்கை வண்ண புடவைகள் தொகுப்பில், உலகின் முதன்முறையாக 4000 விதவிதமான இயற்கை வண்ண பட்டுபுடவையை தனது சாதனை படைப்பாக அறிமுகப்படுத்துகிறது. கடுக்காய், நெல்லிக்காய், மாதுளை, மல்பரி போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட தாவரங்கள், தாதுக்களை பயன்படுத்தி இந்த வண்ணங்களை உருவாக்கி இருக்கிறார்கள்.

சங்க இலக்கியத்தின் 99 பூக்கள் பட்டு புடவை

சங்க இலக்கியத்தில், குறிஞ்சிப் பாட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் தமிழ் நிலத்தின் 99 பூக்களை பட்டு புடவையில் ஜரிகையால் நெய்து தனித்துவமான புடவையாக உருவாக்கி இருக்கிறார்கள். மண்ணின் மகத்துவம் பேசும் அற்புதமான பட்டு புடவை.

கற்பகவிருட்சம் பட்டுபுடவை

கற்பகவிருட்சம் பட்டுபுடவை, கடுக்காய், மல்பரி, மரப்பிசின் போன்ற பொருள்களின் இயற்கை வண்ணத்தில் பாரம்பரிய வண்ணமேற்றும் முறையில் வண்ணம் ஏற்றப்பட்டு முந்தானையில் ஜரிகையால் கற்பகவிருட்சம் நெய்யபட்ட அழகிய பட்டு புடவையை அறிமுகப்படுத்துகிறார்கள்.

ஃபீச் ஃபஸ்

2024, உலகின் வண்ணம் என அறிவிக்கப்பட்ட ஃபீச் ஃபஸ் எனப்படும் செஞ்சந்தன வண்ணத்தை ஞானத்திற்கும் அமைதிக்கும் அடையாளப்படுத்தி அறிவித்திருக்கிறார்கள். அதே வண்ணத்தை மாதுளை ஓடு, மரப்பிசின் போன்ற இயற்கை பொருட்களைக் கொண்டு உருவாக்கி முந்தானையிலும் பார்டரிலும் பைத்தனியின் நெய்யும் கலையை இணைத்து அற்புதமான சித்திரங்களோடு படைத்திருக்கிறார்கள்.

டிசைன் தொகுப்பில் இருந்து

மெட்டாலிக் ட்வில் பட்டுபுடவை

இரு வண்ணக் கலவையோடு கலம்காரி டிசைன்கள் கொண்ட அற்புதமான பட்டு புடவை. இரு வண்ண மெட்டாலிக் ட்வில் பட்டுபுடவை மயிலின் நீல வண்ணமும் கிரிம்சன் எனும் கருஞ்சிவப்பு வண்ணமும் இணைந்த கலவையில் செவ்ரான் கோடுகளும், பாரம்பரியமிக்க கலம்காரி குதிரை வடிவங்களை பார்டர் மற்றும் முந்தானையில் நெய்து பட்டோவியமாக அறிமுகப்படுத்துகிறோம்.

மண்டலா கலை வடிவ பட்டு புடவை

மனதிற்கு இதமளிக்கும் மென்பிங்க் வண்ணத்தில் முகலாயர் காலத்து பூக்களையும் கலை வடிவங்களையும் முந்தானை மற்றும் பார்டரில் நெய்து மொஹல் மண்டலா குறியீடுகளும் இணைத்து நெய்யப்பட்ட பண்டிகை காலத்திற்கேற்ற அழகிய பட்டு புடவை,

புஜோடி பட்டு புடவை

புஜோடி முறையில் நெய்யப்பட்ட பட்டு புடவை தனித்துவமான வெளிர்மஞ்சள் நிறத்தில் புஜோடி நுட்பத்தில்பார்டரும் முந்தானையும் கோர்வை முறையை பயன்படுத்தி மஸ்டர்ட், ஆரஞ்ச், மெரூன், ட்டீல் மற்றும் பிங்க் வண்ண கலவையினால் உருவாக்கப்பட்ட அற்புத பட்டுபுடவை.

விரிடியன் வண்ண பட்டு புடவை

விரிடியன் எனும் அரிய வண்ணமான நீலமும் பச்சையும் கலந்த வண்ணத்தில் 11 இன்ச் பார்டரோடு பாரம்பரிய கமலம் மற்றும் பன்னீர் செம்பு புட்டாக்கள் நெய்யப்பட்டு உருவாக்கப்பட்ட அற்புதமான பட்டுப்புடவை.

லினோ தொகுப்பு

காப்பரிமை பெற்ற லினோ நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கி இருக்கும் இந்த பட்டுப் புடவைகள் வழக்கமான பட்டுப் புடவைகளில் இருந்து 40% எடை குறைவாக இருப்பதோடு அணிவதற்கு இலகுவாகவும் காற்றோட்டம் கொண்டதாகவும் உருவாக்கி இருப்பது தனிச்சிறப்பு.

லினோ கட் ஒர்க் பட்டு புடவை

கைநெசவில் உருவான லினோ கட் ஒர்க் பட்டு புடவை பாரம்பரியமிக்க பார்ட்டிலி புடவைகளின் சாயலில் மிக நுட்பமாக பைன் மரபூக்களை மீனா காரி வேலைபாடுகளுடன் ஆரஞ்சு வண்ணத்தில் ஒரு பகுதியும் மறு பகுதியில் ஜீயோ மெட்ரிக் வடிவங்களும் இணைத்து வளைந்து செல்லும் ஏற்ற இறக்க கட்ஒர்க் பார்டர்களோடும் லினோ நுட்பத்தில் நெய்யப்பட்ட பட்டு புடவை.

பாயடி டிஸ்யூ லினோலைட்

லினோ நுட்பத்தை பயன்படுத்தி டிஸ்யூ பாணியில் கிரிம்சன் வண்ணத்தில் பாரம்பரியமிக்க பாயடி கட்டங்களும், பொற்காசு புட்டாக்களோடும் கான்ட்ராஸ்ட் பார்டரில் ஜரிகையால் மொஹல் மோட்டிப்களும் இணைத்து நெய்யப்பட்ட பட்டு புடவை.

லினோ வர்ணா

லினோ நுட்பத்தை பயன்படுத்தி மொஹல் மோட்டிப்கள் மீனா காரி வேலைப்பாடுகளால் மெருகூட்டப்பட்டு, கோடுகளால் அலங்கரிக்கப்பட்டு அழகியலோடு உருவாக்கப்பட்ட பட்டு புடவை.

கடந்த நூறாண்டு கால ஆரெம்கேவி யின் பட்டு பயணத்தில் மிகவும் பேசுபொருளான தனித்துவமான படைப்புகள், அம்ச தமயந்தி பட்டுப்புடவை, சின்னஞ்சிறு கிளியே பட்டுப்புடவை, தர்பார் கிருஷ்ணா, ஐஸ்வர்ய பூக்கள் மற்றும் குறளோவியம், தி கிராண்ட் ரிவர்சபிள் பட்டு புடவை, 50,000 வண்ண பட்டு புடவை, வர்ணஜாலம் தொகுப்பு ,மிக தனித்துவமான இயற்கை வண்ண பட்டுபுடவைகள், எடை குறைவான லினோ தொகுப்பு, மரபு மீட்டுருவாக்க பட்டுபுடவைகள் தொகுப்பு போன்ற படைப்புகளின் கருத்தாக்கங்களும், தொழில்நுட்பங்களும் ஆய்வு வெற்றிகளோடும் உருவாக்கப்பட்ட சாதனை படைப்புகளாக உலா வருகின்றன.

ஆரெம்கேவி திருமண பட்டு புடவைகளில் தனித்துவமான பட்டுக்களை அறிமுகப்படுதியதில் வாடிக்கையாளர்களின் குடும்ப உறுப்பினராகவே மாறி இருக்கிறது சென்னையில் மூன்று கிளைகளோடும் T.நகர் பனகல் பூங்கா, வடபழனி விஜயா மால், பீனிக்ஸ் வேளச்சேரி மற்றும் திருநெல்வேலி கோயம்புத்தூர் , பெங்களூரு ஆகிய கிளைகளோடு இயங்கி வருகிறது

தொடர்ந்து தனித்துவமான படைப்புகளை அறிமுகப்படுத்துவதோடு இல்லாமல் கைத்தறி நெசவாளர்களுக்கு உதவும் வகையில் நுமேடிக் நுட்பத்தில் பெண்களும் எளிதாக நெய்யும் விதமாக புதியதொரு தறியைவடிவமைத்து நெசவாளர்களுக்கு அர்ப்பணித்து இருக்கிறது நெசவாளர்களின் குடும்ப பொருளாதார மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் ஆரெம்கேவி என்றென்றும் துணை நிற்கும் என்பதற்கு இது ஒரு சாட்சியாக அமைகிறது.

மேலும் தொடர்புக்கு

திருமதி.லதா 09841936 105


Next Story