விம்பிள்டன் டென்னிஸ்: மகளிர் அரையிறுதியில் செக் குடியரசு வீராங்கனை வாண்ட்ரோசோவா வெற்றி


விம்பிள்டன் டென்னிஸ்: மகளிர் அரையிறுதியில் செக் குடியரசு வீராங்கனை வாண்ட்ரோசோவா வெற்றி
x

அரையிறுதியில் மார்கெட்டா வாண்ட்ரோசோவா உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினாவை வீழ்த்தினார்.

லண்டன்,

'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரை இறுதிப்போட்டியில் உக்ரைன் வீராங்கனை எலீனா ஸ்விடோலினா உடன் செக் குடியரசு வீராங்கனை மார்கெட்டா வாண்ட்ரோசோவா மோதினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மார்கெட்டா வாண்ட்ரோசோவா 6-3, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்விடோலினாவை வீழ்த்தி வெற்றி பெற்றார். கடந்த 60 ஆண்டு கால விம்பிள்டன் வரலாற்றில் முதல் நிலை அல்லாத வீராங்கனை இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது இதுவே முதன்முறை ஆகும்.



Next Story