விம்பிள்டன் டென்னிஸ் : மேட்டியோ பெரெட்னி தொடரிலிருந்து விலகல்


விம்பிள்டன் டென்னிஸ் : மேட்டியோ பெரெட்னி தொடரிலிருந்து விலகல்
x

Image Courtesy : AFP 

இத்தாலியை சேர்ந்த மேட்டியோ பெரெட்டினி இந்த விம்பிள்டன் டென்னிஸ் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

லண்டன்,

ஆண்டுதோறும் 4 வகையான 'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிக உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நேற்று தொடங்கியது .இந்த தொடர் அடுத்த மாதம் 10-ந்தேதி வரை நடக்கிறது.

இந்த நிலையில் 2021ம் ஆண்டு விம்பிள்டன் தொடரில் 2ஆம் இடம் பிடித்த இத்தாலியை சேர்ந்த மேட்டியோ பெரெட்டினி இந்த விம்பிள்டன் டென்னிஸ் தொடரிலிருந்து விலகியுள்ளார்.அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் காரணமாக அவர் தொடரிலிருந்து விலகியுள்ளார்.


Next Story